ரஷ்யாவிற்கு எதிராக ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை

ஐக்கிய ராஜ்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ரஷ்யாவிற்கு எதிராகப் பயன்படுத்த ஐக்கிய ராஜ்ஜியம் அனுமதி வழங்கவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்ரைமெர் இது தொடர்பான எந்தவொரு சமிக்ஞையையும் வழங்கவில்லை என பிபிசி உலக சேவை
சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யாவின் இலக்குகள் மீது மேற்குலகில் தயாரிக்கப்பட்ட யுதங்களைப் பயன்படுத்த இடமளிக்குமாறு உக்ரேன் அரசாங்கம் தொடர்ச்சியான கோரிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

இதேவேளை, ரஷ்யாவின் மிகப்பெரிய ஊடக வலையமைப்பான RT எனப்படும் ரஷ்யா ருடெ(Today) தொலைக்காட்சி அலைவரிசையின் மீது அமெரிக்க புதிய தடைகளை அறிமுகம் செய்துள்ளது.

ரஷ்ய உளவுத் துறையின் உத்தியோகப்பற்றற்ற ஆயுதமாக சுவு தொலைக்காட்சி வலையமைப்பு செயற்பட்டு வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அன்டனி பிளிங்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகத்தை இந்தத் தொலைக்காட்சி தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருவதாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )