வாக்காளர் அட்டைகளில் 77 வீதமானவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 77 வீதமானவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எஞ்சிய அட்டைகளை இன்றும் நாளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நாளை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பிரதேச தபால் அலுவலகங்களில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வாக்குச்சீட்டுக்களில் 80 வீதமானவை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவை விசேட பாதுகாப்புடன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் சகல வாக்குச்சீட்டுகளும் அச்சிடப்படும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )