சிங்கபூரில் வாழும் புலம்பெயர் சமூகங்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்பட வேண்டும் – பாப்பரசர்

வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கபூரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சமமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் கிழக்காசிய பிராந்தியத்திற்கான 12 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாப்பரசர், இன்று சிங்கபூரில் இடம்பெற்ற சர்வமத கூட்டமொன்றில் உரையாற்றினார்.

சிங்கபூர் சனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிங்கபூருக்கு இடம்பெயர்ந்தவர்களில் கூடுதலானோர் கட்டுமானத்துறை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை பாப்பரசர் சுட்டிக்காட்டினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )