காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18க்கும் அதிகமானோர் பலி.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோடு காஸாவில் நடத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதில் ஐக்கிய நாடுகளின் பலஸ்தீனுக்கான அகதிகள் நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களும் அடங்குகிறார்கள். காஸாவில் உள்ள முசைரத் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கனிஷ்ட மாணவர்களுக்கான பாடசாலை இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அதிக அளவிலான மாணவிகளினதும், ஆசிரியைகளினதும் சடலங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
காஸாவில் அமைந்துள்ள பாடசாலைகளின் மீது இஸ்ரேல் அண்மைக் காலமாக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகச் செய்திகள்