முதியவர்களுக்கான தேசியக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் -சஜித்

.முதியவர்களுக்கான தேசிய கொள்கையை அறிமுகம் செய்து, ஜனாதிபதி செயலணியின் கீழ், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டுக்காக பாரிய அளவில் சேவை ஆற்றியதாகவும் அவர் கூறினார். கொழும்பு சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்களுக்கு 15 சதவீத வட்டியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான முதியோர் அடையாள அட்டையின் ஊடாக கூடுதலான கழிவுத் தொகையில் சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )