தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் புதிய இணையதளம்

எந்தவொரு அனர்த்த நிலைமையினையும் எதிர்கொள்ள தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியம் தயாராக இருப்பதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாகலா அபயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி, தனியார் துறையினருக்கும் சேவைகளை வழங்குவதற்காக இந்த நிதி தயாராக உள்ளது.

காப்புறுதி பொறுப்பு நிதியத்தின் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையதளத்தின் மூலம், காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அனைத்து சேவைகளையும் ஒன்லைன் முறை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )