சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ இன்றும், நாளையும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர், நயினாதீவு ரஜ மஹா விஹாரைக்குச் சென்று பௌத்த மத வழிபாடுகளில் பங்கேற்று ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )