விவசாயிகளுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் – சஜித் 

விவசாயிகளுக்கு இயன்ற அளவான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
தாம் வழங்கிய வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக மதவாச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது நிர்வாகத்தின் கீழ், மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழக்கூடிய நாட்டொன்றை உருவாக்கப் போவதாகவும் கல்கிஸ்ஸையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )