மக்கள் சார்ப்பு அரசாங்கம் ஏற்படுத்தப்படும் – அனுர

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை வழங்கக்கூடிய மக்கள் சார்ப்பு அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்களை உயர்ந்தபட்ச அளவில் பயன்படுத்தி அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாகி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாறிவரும் சந்தைக்கு ஏற்ற வகையில் பொருட்களையும் சேவைகளையும் வழங்க முன்பிருந்த அரசாங்கம் தவறி விட்டதாகவும் அவர் கூறினார்.
பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )