ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 12 நாடுகளுக்கு அழைப்பு.

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஜனாதிபதி தேர்தலை கண்காணித்ததன் பின்னர், அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஏற்கனவே நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வரவுள்ளனர். அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேர்தலை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன. உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக அடுத்த மாதம் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகம் அடுத்த மாதம் 14ஆம் திகதி நிறைவடையும். வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் 2024 வாக்காளர் பட்டியலை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு உரிய தபால் அலுவலகத்தில் தங்களது அடையாளத்தை உறுதி செய்த பின்னர் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 771 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 747 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகளாகும்.

பெஃ;பரல் அமைப்பிற்கு 128 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 150 ஆகும். ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 200க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்புக்கு இதுவரையில் 80 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஆலோசிக்க தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )