தேர்தல் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக, ஜனாதிபதி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அதனை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் அவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதித் தேர்தலி;ல் தோற்கடிப்பதற்கு பல சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எனினும் ரணில் விக்ரமசிங்கவின் தோல்வியை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் சொத்துக்கள் மற்றும் வளங்களை அவரின் தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துகிறார். சகல அரச நிகழ்வுகளும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றன. ஜனாதிபதி செயலகம், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )