நாகப்பட்டினம் – காங்கேசன்துறை, பயணிகள் கப்பல் சேவை 15ஆம் திகதி ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை பயணிகள் கப்பல் வெள்ளோட்டத்திற்காக நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

பயணி ஒருவருக்கு ஒருவழி பயணத்திற்கான கட்டணமாக 26 ஆயிரம் ரூபாய் அறிவிடப்படும் என, சிவகங்கை கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயணி ஒருவர் 60 கிலோ எடை கொண்ட பொதியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்த படகு சேவை ஞாயிறு தவிர வாரத்தின் ஏனைய நாட்களில்; இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )