ஜனாதிபதி தேர்தலில், இலங்கை மக்கள் கட்சி, தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை மக்கள் கட்சி ஆதரவு வழங்கவுள்ளது.

குருநாகலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே, இலங்கை மக்கள் கட்சியின் ஆதரவு, பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால், அக்கட்சியின் சில தவறான செயற்பாடுகளினால், நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்கு செல்வதை தடுப்பதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற பின்னர், வரிசை யுகத்தை ஒழித்தார். நாட்டில் விரைவான பொருளாதார அபிவிருத்தி உருவாக்கப்பட்டது.

எனவே, ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அசங்க நவரத்ன குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )