வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பஞ்சரதத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 37ஆவது ஆடிப்பூர மகோற்சவ நிகழ்வுகள் தற்போது இடம்பெறுகின்றன.

பஞ்சரதத் தேர்த் திருவிழா தற்சமயம் இடம்பெறுகிறது. வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர், பாமன்கடை, டபிள்யு டி சில்வா மாவத்தை ஊடாக காலி வீதியை சென்றடையும்.

அங்கிருந்து பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் தேர், இன்று மாலை மீண்டும் வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடையும். தீர்த்தத் திருவிழா நாளை நடைபெறும்.

இதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று ஆரம்பமான மகோற்சவம் எதிர்வரும் 25 நாட்களுக்கு நடைபெறும்.

அத்துடன், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 28ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் வசதி கருதி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அ. ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா, கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது. ஓன்பது தினங்களுக்கு மாலை திருச்செபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி என்பன இடம்பெறும்.

எதிர்வரும் 14ஆம் திகதி மாலை விசேட நற்கருணை ஆராதனை இடம்பெற்று, பக்தர்களுக்கு நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்படும்.

மறுநாள் காலை, 6.15ற்கு திருவிழாத் திருப்பலி ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )