டொனால்ட் டிரம்ப் – கமலா ஹரிஸ் இடையிலான விவாதம் அடுத்த மாதம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு இடையிலான முதலாவது விவாதம் அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஏபிசி நியூஸ் அதனை நடத்த தயாராக உள்ளது. அந்த செய்திச் சேவை தனது ஓ வலைதளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
தனது ஜனநாயக கட்சி வேட்பாளருடன் எந்த விவாதத்திற்கும் தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்த நிலையில், தாமும் விவாதத்திற்கும் தயார் என கமலா ஹரிஸ், மிச்சிகன் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES உலகச் செய்திகள்