முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்-லின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் அனுதாபம்.
முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்-லின் மறைவு குறித்து பாராளுமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன இரங்கல் யோசனையை முன்வைத்தார். திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் முன்னோடியாக ரொனி டி மெல் திகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
ரொனி டி மெல் மக்களிடம் நட்புடன் பழகும் அரசியல் தலைவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரொனி டி மெல் ருஹுனு பல்கலைக்கழகத்தை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியதாக சபைத் தலைவர், சுசில் பிரேம்ஜயந்த நினைவு கூர்ந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ரொனி டி மெல் பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் முழுமையான அறிவைக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வரலாற்றில் பாரியதொரு அத்தியாயத்தை அவர் பதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.