முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ரஞ்சன் லமாஹேவா விடுதலை
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதல்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு,
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதேவேளை, பம்பலபிட்டி பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டு முஹமட் சியாம் என்ற கோடீஸ்வர வர்த்தகரின் கொலையுடன் தொடர்புடைய ஆறு பிரதிவாதிகள் மீதான மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், ஆறு பிரதிவாதிகளுக்கு எதிரான மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
CATEGORIES செய்திகள்