சுற்றுலா இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.30ற்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமாகவிருக்கின்றது.

இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றால் மாத்திரமே சுற்றுத்தொடரின் தோல்வியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்கவிருக்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )