காலஞ்சென்ற கலபொட ஞானிஸ்வர தேரர்: புத்த சாசனம், பௌத்த மதத்திற்கு அரும் பணியாற்றினார்.- அனுதாப செய்தியில் ஜனாதிபதி

காலஞ்சென்ற கலபொட ஞானிஸ்வர தேரர், புத்த சாசனம், பௌத்த மத மகத்துவத்திற்கும் அரும்பணியாற்றியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க தெரிவித்துள்ளார்.

தேரரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்திலேயெ ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த முறையில் தேரர் எடுத்துரைத்துள்ளார்.

புத்த சாசன விழுமியங்களை பாராமரித்து மேம்படுத்துவதிலும் ஆமீச பூஜை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் தேரர் அரும்பணியாற்றியுள்ளார்.

ஆசிய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகள் மத்தியில் பௌத்த தர்ம போதனைகளை சிறந்த முறையில் போதித்துள்ளார்.

சுற்றாடலை பேணுவதிலும் தேரரின் பங்களிப்பு மகத்தானது. கலபொட ஞானிஸ்வர நாயக்க தேரரின் மறைவு நாட்டுக்கும் புத்த சாசனத்திற்கும் பேரிழப்பாகும் என்று ஜனாதிபதி தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )