நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக்க முடியும் -தேசிய மக்கள் சக்தி 

இருண்ட யுகத்தை கடந்த காலத்திற்கு ஒப்படைப்பதற்கு நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாற்றத் திறனாளிகள் தத்தமது பிரச்சினைகளை தம்மிடம் சமர்ப்பித்துள்ளதாக அதன் வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக தேசிய மக்கள் சக்தி வரைந்த தேசிய கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரு.அனுர குமார திஸாநாயக்க உரையாற்றினார்.

தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஊறுவிளைய இடமளிக்கப் போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )