பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த மருத்துவப் பிரிவு நீக்கம்

பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார உபகரணங்கள், மருந்துகள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிரதமர் செயலகத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் இடம்பெற்றது.
அங்கு பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்கள் சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவிடம் பிரதமரின் செயலாளர் கையளித்தார்.
தேவையற்ற செலவுகளை குறைக்க அரசாங்கம் கொள்கை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, மருத்துவப் பிரிவின் மனித மற்றும் பௌதீக வளங்கள் பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )