அஸ்வெசும கொடுப்பனவில் அநீதி இழைக்கப்பட்டவர்களைக் கண்டறிய குழு 

அஸ்வெசும நலன்புரித்திட்ட உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அங்கு பிரச்சினைக்குரிய சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )