முட்டைக்கான உயர்ந்தபட்ச விலையாக 37 ரூபா நிர்ணயம்.

முட்டையின் உயர்ந்த பட்ச சில்லறை விலையை 37 ரூபாவாகப் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கமும், மொத்த வியாபாரிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

37 ரூபாவை விட கூடுதலான விலைக்கு முட்டையை விற்பனை செய்ய வேண்டாமென அமைச்சு உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

விரைவில் உணவு கொள்கைக் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட உள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு உரிய நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் பற்றியும் கவனம் செலுத்தப்படவிருக்கிறது.

உணவுகளின் விலைகளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )