கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவரித்தனை உயர் மட்டத்தில்.

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த புரள்வு சிறந்த அளவில் அதிகரித்துள்ளது. நேற்றைய நாள் 700 கோடி ரூபாவைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தில் பதிவான இரண்டாவது அதிக புரள்வாக இது காணப்படுகின்றது. பங்குச் சந்தை தொடர்பில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் சகல பங்குகளின் விலைச்சுட்டெண் மற்றும் SNP – SRI LANKA விலைச்சுட்டெண் ஆகிய இரண்டும் நேற்றைய தினம் உயர்ந்த பெறுமதியை காண்பித்தமை விசேட அம்சமாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )