காஸாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்
இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 143 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்தில் அதிகளவிலானோர் காயமடைந்திருப்பதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 77 வரை அதிகரித்திருப்பதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இதேவேளை, காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள மற்றுமொரு அகதி முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.
சம்பவத்தில் இடம்பெற்ற சேதங்களின் விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
CATEGORIES உலகச் செய்திகள்