பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் 791 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 645 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 136 முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வன்முறைகள் தொடர்பான 7 முறைப்பாடுள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் தொடர்பான அலுவலகங்களில் உள்ள தபால்மூல வாக்காளர்களுக்கு தங்களின் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்காக எதிர்வரும் 30ஆம் திகதியும், அடுத்த மாதம் 4ஆம் திகதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )