ஏழு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஐந்து கிலோ ஐஸ் போதைப் பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பெறுமதி ஏழு கோடியே மூன்று லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேக நபர் கொதடுவ பிரதேசத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் 51 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

அவரை அழைத்துச் செல்ல வந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )