லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்.

இஸ்ரேல் நேற்று லெபனான் தலைநகர் பெய்றூட் மீது 17 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஆறு கட்டடங்கள் தரைமட்டமாக அழிவடைந்துள்ளன.

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலில் ஒரே நாளில் இடம்பெற்ற கடுமையான தாக்குதலாக இது அமைந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )