ஜனாதிபதியின் வெற்றிக்காக வட கிழக்கு அரசியல் கட்சிகள் உறுதி.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் பல உறுதியளித்துள்ளன.

வடக்கு கிழக்கை மாத்திரமன்றி முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய பரந்த நோக்குடன் கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதியே ஆவார்.

எனவே எதிர்காலத்தில் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இந்த கூட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. நாடு ஆபத்தில் இருந்தபோது துணிச்சலுடன் முன்வந்த ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் அந்த சவால்களை முறியடிக்க ஆதரவளிப்பதாக அங்கு வந்திருந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் இருட்டில் தப்பிச் சென்ற தருணத்தில், மற்றுமொரு குழுவினர் நாட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஒளிந்துகொண்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ஜனாதிபதி புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள் பலர் அதில் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அவர்கள் உறுதியளித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )