தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒலிபரப்பு நேரம் ஒதுக்கும் சீட்டிழுப்பு இன்று  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரசாரத்திற்காக ஒலிபரப்பு காலத்தை ஒதுக்கும் நடைமுறை இன்று இடம்பெறவுள்ளது.
இதற்குரிய சீட்டிழுப்பு இன்று முற்பகல் பத்து மணிக்கு கொழும்பு மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்கிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களும், சுயேட்சை குழுக்களின் பிரதானிகளும் மாத்திரம் சீட்டிழுப்பில் பங்கேற்கலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய,  வேட்புமனு தாக்கல் செய்த சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சை குழுக்களுக்கும் ஒலிபரப்புக்கான நேரத்தை ஒதுக்குவது கட்டாயமானதாகும்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )