இலங்கையை தூய்மையான நாடாக மாற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம்.

இலங்கையை தூய்மையான நாடாக மாற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம்.

இலங்கையை ஆசிய வலயத்தின் தூய்மையான நாடாக மாற்றுவதற்கு தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். குறிப்பாக ஜனாதிபதி விசேட படையணி இதற்காக உருவாக்கப்படும்.

இதன்போது பஸ்தரிப்பிடம், ரெயில் நிலையம், பஸ்-ரெயில், ஆறுகள், நதிகள் போன்றவற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு தூய்மை மிக முக்கியமானது. இதற்கான நிதியம் ஒன்றும் உருவாக்கப்படும். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதனிடையே ஹோமாகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி பங்கேற்றார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியை வலுப்படுத்த பொதுத் தேர்தலின் வெற்றி அவசியம் என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண் போக மாட்டாது என்று குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )