இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்மானம்.

இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ஜி-7 நாடுகளின் பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த பிராந்தியத்தின் கடற்பகுதியில் சீன இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை ஜி-7 நாடுகள் எடுத்துள்ளன.

ஜி-7 நாடுகளின் முதலாவது பாதுகாப்பு அமைச்சு மட்ட உச்சிமாநாடு இத்தாலிய நகரான நேபில்ஸ் நகரில் இடம்பெற்றது.

ரஷ்ய இராணுவ விமானங்கள் தமது வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தாக இந்த கூட்டத்தின் போது ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகட்டனி ஜென் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )