தொற்றுநோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

தொற்றுநோய் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக எலிக்காய்ச்சல், வயிற்றோட்டம், இரத்தப்பெருக்குடான வயிற்றோட்டம், வாந்திபேதி உள்ளிட்ட பல நோய்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில் ஏற்படக்கூடிய அபாயம்; காணப்படுகின்றது.

இதனால், ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வருடத்தில் இதுவரையில் 41 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த மாதத்தின் இதுவரையில் மாத்திரம் 1,717 பேர் டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அந்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 330 ஆகும். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 20 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )