கிராமிய மட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கை – ஐ.ம.சக்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி மேற்கொண்டு வருவதாக கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுத் தேர்தலுக்கான பிரசார கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் தங்காலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மாவட்ட மட்டத்திலும் பிரதான கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடு வீPடாகச் சென்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் வேலைத்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் பற்றியும் மாவட்ட மட்டத்திலான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )