லிபியா சென்றுள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு சலுகைக் காலம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது லிபியாவில் தொழில்வாய்ப்பிற்காக சென்றுள்ளவர்கள், தம்மை பதிவு செய்துகொள்வதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டிருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டபூர்வமான தொழில்வாய்ப்பையும் பணியகத்தினால் வழங்கப்படும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது அவசியம் என்று பணியகத்தின் மேலதிக செயலாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )