சர்வதே சிறுவர் தினத்தில் தேசிய மிருக காட்சிசாலையில் பல நிகழ்ச்சிகள்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தெஹிவளை தேசிய மிருககாட்சி சாலையில் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அன்றையதினம் 12 வயதிற்குட்பட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாயலம் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருககக்hட்சி சாலை பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்தார்.

சிறுவர்கள் பின்னவல சரணாயலத்தில் இலவசமாக யானைகளில் சவாரிகளை மேற்கொள்ளவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்குச் சுற்றாடல் தொடர்பான அறிவை வழங்குதல், சிறந்த பண்புகளை விருத்தி செய்தல், திறன்விருத்தி மற்றும் களியாட்ட நிகழ்வுகளும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )