லெபனானுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அவசர மனிதாபிமான உதவி

லெபனானை தளமாக கொண்ட ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு தனது தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய வான்தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து மத்திய கிழக்கில் இராணுவ பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட வான்தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இதனிடையே, லெபனானுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அவசர மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் டொலர்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )