அனைத்து மாவட்டங்களில் படையினரை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு.

அனைத்து மாவட்டங்களில் படையினரை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு.

சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆயுதம் தரித்த இராணுவத்தினரை நிலைநிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்றில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் சகல உறுப்பினர்களும் இவ்வாறு நியமிக்கப்படுவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய நாட்டின் சகல நிர்வாகப் பகுதிகள், மாவட்ட மற்றும் அதனை அண்மித்த நீர்ப்பரப்பில் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இவ்வாறு ஆயுதம் தரித்த இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )