கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கண்டி நகர சபைப் பிரதேசத்தின் ஹரிஸ்பத்துவ, பூஜாபிற்றிய, பாத்ததும்பர, அக்குரண நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ரஜவெல்ல, சிரிமல்வத்த, அம்பிற்றிய, அமுனுகம, ஹந்தாவ, வளல்ல பிரதேசங்கள் மற்றும் கண்டி நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் பகிர்ந்தளிக்கப்படும் மாவத்தகம பிரதேசத்திலும் நீர்விநியோகம் தடைப்படும்.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர்விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )