அபிவிருத்தியடைந்த நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க தயார்.

அபிவிருத்தியடைந்த நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க தயார்.

வலுவான பொருளாதாரம் கொண்ட அபிவிருத்தியடைந்த நாடு, எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலை விட்டுவிட்டு 2022ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு தாம் நாட்டுக்காக முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த மக்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும். கிராண்பாஸில் நேற்று இடம்பெற்ற தனது இறுதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் நாட்டை வங்குரோத்து செய்யும் கொள்கைகளை தோற்கடிக்க இந்நாட்டு மக்கள் தயாராக உள்ளனர்.

நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

எந்தவொரு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் போது அதனை மீட்பது கடினம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனமொன்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு பாரிய மாற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு நெருக்கடி நிலையில் இருந்த போது தாம் தப்பிச் செல்லவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )