இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்தல்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமது நாட்டு பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைதியான கூட்டங்கள் கூட எச்சரிக்கையின்றி வன்முறையாக மாறக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமது நாட்டு பிரஜைகள், இலங்கைக்கு செல்வதாக இருந்தால் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )