இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவரின் இறுதிக் கிரியைகள் நாளை

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் உடல் நல்லடக்கத்திற்கான கட்டாருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் அவரது உடல் கட்டாரில் அமைந்துள்ள லுஸெயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவருக்கான இறுதித் தொழுகையை ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெயினி நடத்தியதாக அல்ஜஸீரா இணையதளம் அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )