இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான இலங்கை அணியின் விபரம் இன்று அறிவிக்கப்படும்

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

முதலாவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரணஇ தில்ஷான் மதுசங்க ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலன்கொட கிரிக்இன்போ இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

கண்டி – மடவளை மதீனா கல்லூரியின் பழைய மாணவரான மொஹமட் சிராஜ் இலங்கை ஏ அணிக்காகவும் லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் கோல் மாவல்ஸ் அணிக்காகவும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )