தென் சீனக்கடலில் நிலவும் முரண்பாடு குறித்து கூடுதல் கவனம்
தென் சீனக்கடலில் பிலிப்பின்ஸ் மற்றும் சீன கரையோர பாதுகாப்பு படைகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று இரு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று தென்சீனக் கடலின் சபீனா சோல் பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு பிராந்தியத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனா மற்றும் பிலிப்பின்ஸ் தென் சீனக்கடலில் ரோந்து நடவடிக்கைகளில் தமது கப்பல்களை ஈடுபடுத்துவது தொடர்பிலேயே இந்த முரண்பாடு எழுந்துள்ளது.
CATEGORIES உலகச் செய்திகள்