நாட்டை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை NPP யிடம்.
நாட்டை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கு மாத்திரமே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியில் பெண்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
நாட்டில் புதிய ஆட்சியை ஏற்படுத்த பெண்கள் அனைவரும் அணிவகுத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடி, பாதாள உலக செயற்பாடுகள் என்பனவற்றை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
TAGS #ஹரினி அமரசூரிய