ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சகல மாவட்டங்களுக்கும் விஜயம்

ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிலுள்ளவர்கள,; இன்று சகல மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தக் குழுவில் 26 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

குழுவின் பிரதானியாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நாவோ சென்ஜின் அமூர் செயற்படுகிறார். இலங்கையின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல், தேர்தல் பற்றிய நம்பிக்கையினை மேம்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சியை பலப்படுத்துதல் என்பன ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் குழுவின் நோக்கமாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )