இனவாதத்தை நிராகரிக்கும் அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கடந்த கால அராங்கங்கள் இனவாதத்தை பயன்படுத்தி, அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டாலும், தமது அரசாங்கத்தின் கீழ், இனவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். நாட்டில் உள்ள எந்தவொரு இனத்தவரும் இனவாதிகளாக இருக்கவில்லை என்றும், ஆனால், நாட்டின் அரசியலே இனவாதமாக செயற்பட்டதாகவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.