ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே  எஞ்சியுள்ளன. 

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 23 நாட்கள் உள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் ஆயிரத்து 229 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஊடாக 520 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஊடாக, 709 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )