இராணுவ வீரர்களின் ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வு -நாமல் ராஜபக்ஷ 

தமது அரசாங்கத்தின் கீழ் இராணுவ வீரர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஸ்ரீலங்;கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்களின் இதயத் துடிப்பை அறியும் அரசியல் கட்சி எதுவேன்றால், அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கட்சியே இராணுவ வீரர்களுக்காக உறுதுணையாக செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக குருநாகல், மாவத்தகம பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )