ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நாளை வெளியீடு

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.

“இயலும் இலங்கை” எனும் எண்ணக்கருவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் வெளியிடப்படும்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை முன்நோக்கிக் கொண்டு செல்லும் திட்டம் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை கண்டியில் வெளியிடப்படும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )